`திமுக எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் துன்புறுத்தப்பட்ட 18 வயது பட்டியலின பெண்' – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைபார்த்து வந்த பட்டியலினப் பெண்ணை, அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாகவும், உடனடியாக இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.

அண்ணாமலை

இது குறித்து அண்ணாமலை தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடுவைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, தி.மு.க என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது.

உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள்மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.