மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதி

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதித்து, வரவேற்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம். சோமசூரியம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் (17) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் ஆன்மிக அதிதிகளாக இராமகிருஸ்ண மிஷன் உதவிப்பொது முகாமையாளர் சுவாமி சுரார்ச்சிதானந்தா ஜீ மஹராஜ், அருட்தந்தை விரைனர், மௌலவி எம்.பி.எம். பிரிதொஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது 2024 ஆம் ஆண்டிற்க்கான புதிய கற்கை நெறிகளுக்கான மாணவர்கள் உள்வாங்கப்பட்டதுடன் அத்தொழிற் கற்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

1983 ஆம் ஆண்டு உப தொழில்நுட்பக் கல்லூரியாக தொழிற்பட்டதுடன் 1993 ஆம் ஆண்டு முதல் தொழில் நுட்பக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டு மட்டக்களப்பு பிராந்தியத்தில் மாணவர்களின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வளர்ச்சிக்கு பாரிய சேவையாற்றி வருவதுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு பெறுமதியான சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.