சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார் . இதை யொட்டி, அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தலைமைச்செயலகத்தில் மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாட்டில், 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடப்பாண்டு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நாளை மறுதினம், அதாவது […]
