Singapores Transport Minister S. Iswaran has resigned after being charged with corruption | ஊழல் புகார்: சிங்கப்பூர் அமைச்சர் ராஜினாமா; சம்பளத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை பிரதமர் லீ அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஜூலை மாதம் இவர் மீதான லஞ்சப்புகார் குறித்து விசாரணை துவங்கியது. சென்ற ஆண்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இவர் மீதான லஞ்சப்புகார் எழுந்ததை அடுத்து இவர் பெற்ற சம்பளம் மற்றும் படித்தொகையை திரும்ப வழங்க முடிவு செய்துள்ளார். இவரது முடிவை ஏற்று கொள்வதாக பிரதமர் லீ தெரிவித்துள்ளார். லஞ்ச லாவண்யமற்ற அரசு நிர்வாகத்தையே விரும்புவதாக லீ கூறியுள்ளார்.

இவரது ராஜினாமாவை அடுத்து போக்குவரத்து துறை பொறுப்பை நிதி அமைச்சர் ஹி ஹாங்தத் கூடுதலாக கவனிப்பார்.

27 குற்றச்சாட்டுகள்

லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்ட விசாரணை தொடர்பாக ஈஸ்வரன் இன்று கோர்ட்டில் ஆஜரானார். கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம், கால்பந்து போட்டி ஆகியவற்றில் டிக்கெட் வாங்கியதில் முறைகேடு, தவறான விமான பயணம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக 27 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.