யாழ்ப்பாண மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில்சார் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (18) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் மேம்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.
தொழில் முயற்சியாளர்களுக்கான கடனுதவி, சந்தை வாய்ப்பு, தரச் சான்றிதழ், நிதி மூலம், தொழில் நிலையங்களை பதிவு செய்தல் முதலான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், யாழ் மாவட்ட சிறுதொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை விருத்தி செய்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், தொழில்சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.