நாட்டின் பல பிரதேசங்களுக்கு பி.;ப 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2024 ஜனவரி 19ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.

2024 ஜனவரி 19ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.