வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கம்பாலா: உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இந்தியா மற்றும் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மாலத்தீவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
லட்சத் தீவுக்கு சென்ற பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. இதனால், அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. இந்தியர்கள் மாலத்தீவு செல்வதை தவிர்க்க துவங்கினர்.
இந்நிலையில், அணிசேரா இயக்கத்தின் இரண்டு நாள் மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடக்கிறது. இதில் பங்கேற்க, இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மோசா ஜமீர் பங்கேற்கிறார். மாநாட்டிற்கு இடையே இரு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கம்பாலாவில் மாலத்தீவு வெளியுறவு அமைச்சரை சந்தித்தேன். இரு நாட்டு உறவுகள் குறித்து வெளிப்படையாக ஆலோசனை நடத்தினோம். அணி சேரா இயக்கம் குறித்தும் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.
மோசா ஜமீர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவ வீரர்களை திரும்ப பெற்றுக் கொள்வது தொடர்பாக நடக்கும் உயர்மட்ட குழு ஆலோசனை குறித்து ஜெய்சங்கரிடம் விவாதித்தேன். மாலத்தீவில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சார்க், அணிசேரா இயக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement