வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை(19) வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது வியாபாரம், சிறு கைத்தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பயனாளிகள் தமது வாழ்வாதாரத்துக்கான தொழில் முயற்சிகளை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்வதாகக் கூறி வடக்கு மாகாண சபைக்குத் தங்களது நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.
இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சு.ஜெயனந்தராசா, மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும், வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.