Suryakumar Yadav: ஐசிசி 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 அணியில் இடம் பிடித்த நான்கு வீரர்கள்

Cricket News in Tamil: 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 ஆண்கள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணிக்கு இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு பல போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தி உள்ளார். உலகக் கோப்பைக்குப் பிறகு, அவரது தலைமையின் கீழ், இந்திய அணி ஆஸ்திரேலியாவை டி20 தொடரில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. ஐசிசி அறிவித்த சிறந்த டி20 ஆண்கள் அணியில் சூர்யகுமார் யாதவை தவிர மேலும் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த வீரர்களை தேர்வு செய்து சிறந்த அணி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஐசிசி 11 சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அங்கீகரிக்கிறது. பேட்டிங், பந்து வீச்சு, ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து சிறந்த அணியை அறிவிக்கிறது.

சூர்யகுமார் யாதவ்

33 வயதான அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், 2023 ஆம் ஆண்டில் 155.95 ஸ்ட்ரைக் ரேட்டில் 17 இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் உட்பட 733 ரன்களைக் குவித்தார். இதமூலம் அவர் ஐசிசியின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியில் இடம் பிடித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியில் இடம்பிடித்த சூர்யகுமார், 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியின் கேப்டனாக தன்னை மேம்படுத்தி கொண்டு, தொடர்ந்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 ஆண்கள் அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இடம் பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளத்துக்கு எதிராக சதம் அடித்தார். புளோரிடாவில் 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களிலும் அவர் தனது பேட்டிங்கால் அதிரடியான இன்னிங்ஸ் விளையாடி ரன்கள் எடுத்தார். சிறந்த அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து இங்கிலாந்தின் பில் சால்ட்டு தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங்

சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் ஐசிசி சிறந்த டி20 ஆண்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு டி20 போட்டிகள் பிஷ்னோய் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். தரவரிசையிலும் முதலிடத்தை எட்டினார். அதேபோல அஷர்தீப் 21 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஐசிசி சிறந்த டி20 ஆண்கள் அணியில் உகாண்டாவை சேர்ந்த அல்பேஷ் ரமாஜானியும் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனுடன் சேர்த்து 30 போட்டிகளில் 449 ரன்கள் குவித்துள்ளார்.

ஜிம்பாப்வேயைச் சேர்ந்த சிக்கந்தர் ராசா தற்போது டி20 தொடர்களில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உள்ளார். இந்த அணியில் ஜிம்பாப்வேயின் ரிச்சர்ட் நகர்வாவும் இடம் பெற்றுள்ளார். 2023 இல், அவர் வெறும் 5.63 ரன்களில் 26 விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் T20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன், மார்க் சாப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பேஷ் ரமசானி, மார்க் அடேர், ரவி பிஷ்னோய், ரிச்சர்ட் நகர்வா, அர்ஷ்தீப் சிங்.

ஐசிசியின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண்கள் டி20 அணி

— யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)
— பில் சால்ட் (இங்கிலாந்து)
— நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ் / விக்கெட் கீப்பர்)
— சூர்யகுமார் யாதவ் (இந்தியா / கேப்டன்)
— மார்க் சாப்மேன் (நியூசிலாந்து)
— சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே)
— அல்பேஷ் ரம்ஜானி (உகாண்டா)
— மார்க் அடேர் (அயர்லாந்து)
— ரவி பிஷ்னோய் (இந்தியா)
— அர்ஷ்தீப் சிங் (இந்தியா)
— ரிச்சர்ட் ங்கராவா (ஜிம்பாப்வே)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.