இலங்கை இராணுவத்தின் இராணுவ புலனாய்வு படையணி படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் 2024 ஜனவரி 21 ஆம் திகதி யால வனப் பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவை கொனகனார பொலிஸார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட 220 கிலோ கஞ்சா உடனடியாக அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த கொனகனார பொலிஸ் நிலையம் சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.