திருமணத்தில் மகள் அணிந்திருந்த நகைகள் குறித்து சுரேஷ்கோபி விளக்கம்

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக கிட்டத்தட்ட 40 வருடங்களாக பயணித்து வருபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களாக பா.ஜ., கட்சியில் இணைந்து தற்போது ராஜ்யசபா எம்பி ஆகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகள் பாக்யாவுக்கும், ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் சமீபத்தில் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நமது பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை ஆசீர்வதித்தார். மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த நாளிலிருந்து சோசியல் மீடியாவில் சுரேஷ்கோபியின் மகள் பாக்யா அணிந்திருந்த நகைகள் குறித்து சிலர் விஷமத்தனமாக தகவல்களை வெளியிட்டு வந்தனர். குறிப்பாக இந்த நகைகள் அனைத்தும் சுரேஷ்கோபிக்கு அரசியல் ரீதியாக அன்பளிப்பாக வந்தவை என்றும் இவை அனைத்திற்கும் முறையான வரி கட்டப்படவில்லை என்றும் சிலர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இவற்றையெல்லாம் பார்த்து கொதித்து எழுந்துள்ள நடிகர் சுரேஷ்கோபி இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்

இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய மகள் அணிந்திருந்த நகைகள் அனைத்துமே அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தது. இதற்கான பணப்பரிமாற்றம் அனைத்தும் ஜிஎஸ்டி வரி உட்பட ஆதாரப்பூர்வமாக இருக்கிறது. தயவு செய்து இதுபோன்று என் மீதும் என் குடும்பத்தின் மீதும் தேவை இல்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.