சென்னை பாஜக மக்களை ராமர் கோவில் திறந்து திசை திருப்புவதாக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அவர் தனது உரையில். ”தற்போது திமுக பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையை கடைப்பிடித்து வருபவர். கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர். […]
