Ayodhya Rams crown is worth Rs.11 crores | அயோத்தி ராமர் கிரீடம் மதிப்பு ரூ.11 கோடி

அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலையின் வைர கிரீடம் மதிப்பு ரூ. 11 கோடி தகவல் வெளியாகி உள்ளது. இந்த கிரீடத்தை குஜராத்தை சேர்ந்த பிரபல டைமண்ட் வியாபாரி ஒருவர் அன்பளிப்பாக வழங்கி உள்ளார். கையில் இருக்கும் வில்லும், அம்பும் முழு தங்கத்தாலானவை. ராமர் சிலை முழுவதும் தங்கம், வைரம், வைடூரியம் என ஜொலிக்கிறது.

அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலை. மூலவரான இவர் கருவறையில் உள்ளார் . ராமர் சிலைக்கு பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தினார்.

கூட்டம் அலைமோதுகிறது.

பக்தர்கள் வர அனுமதிக்கப்படுவதை முன்னிட்டு முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாதுகாப்பு படையினர் சிரமப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.