புதுடில்லி, தமிழகத்தில், ஆளும் தி.மு.க.,வைச் சேர்ந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலைக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2012ல், மாநில லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருவரும், 2022ல் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோர், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து, 2023ல் விடுவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘எந்த காரணமும் கூறாமல் விடுதலை செய்ய சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை; மேலும் இது சட்ட விரோதமானது’ என குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள், பிப்., முதல் வாரத்தில் இருந்து உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அவர்கள் தடை கோரியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement