ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாகவும் மற்றும் சித்தூர், ரெட்ஹில்ஸ் உள்பட வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்று […]
