டில்லி திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மறைமுகமாக பாஜகவுக்கு உதவுவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. மாநிலக் கள நிலவரங்களுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த களப்பணிகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி […]