Old man dies after being attacked by a wild elephant | காட்டுயானை தாக்கி முதியவர் பலி

மூணாறு:மூணாறு அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து வந்தவர் காட்டு யானை தாக்கி பலியானார்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே தொம்பிளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பால் ராஜ் 73. இவர் மூணாறு அருகே தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் உறவினர் வீட்டில் இன்று நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்தார்.

நேற்றிரவு நிச்சயதார்த்தத்தில் பங்கேற்று விட்டு 9:15 மணிக்கு திருமண வீட்டை நோக்கி நடந்து வந்தபோது அங்கு வந்த காட்டு யானை தாக்கியது.

அதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேழே பால்ராஜ் பலியானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.