Vodafone Idea Recharge Plans: தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi) அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச Swiggy One சந்தாவை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கு இந்த உறுப்பினர் சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இலவச Swiggy One சந்தாவைப் பெறுவார்கள்.
Swiggy One என்றால் என்றால்?
Swiggy One என்பது ஒரு வாடிக்கையாளர் சேவையாகும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு Swiggy மூலம் உணவை ஆர்டர் செய்வதில் தள்ளுபடிகள் மற்றும் பிற நன்மைகளை கிடைக்கும். 501 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட Vi Max எனப்படும் போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பயன்படுத்தினால், இப்போது Swiggy One இலவச மெம்பர்ஷிப்பைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தாவுக்கு, பொதுவாக 2 ஆயிரம் ரூபாய் 500 செலுத்த வேண்டும். ஆனால் Vi Max திட்டத்தில் நீங்கள் அதை இலவசமாகப் பெறுவீர்கள்.
வோடபோன் ஐடியாவின் இந்த இலவச சலுகை, நிறுவனத்தின் ‘Choice’ முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சியின் கீழ், வோடபோன் ஐடியா பயனர்கள் பொழுதுபோக்கு, உணவு, பயணம் மற்றும் மொபைல் பாதுகாப்பு போன்ற பகுதிகளில் தங்களுக்குப் பிடித்த அம்சங்களைத் தேர்வு செய்யலாம்.
எந்தெந்த திட்டங்களில் இது கிடைக்கும்?
இப்போது வோடபோன் ஐடியா அதன் Vi Max என்ற தனிப்பட்ட மற்றும் குடும்ப போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு 2500 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘Swiggy One Membership’சந்தாவை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது. Vi Max போஸ்ட்பெய்ட் பயனர்கள் ரூ. 501, ரூ. 701, REDX திட்டம் ரூ. 1101 மற்றும் Vi Max குடும்பத் திட்டம் ரூ.1001 மற்றும் ரூ.1151 திட்டங்களில் Swiggy One உறுப்பினர்களைப் பெறலாம். குறிப்பாக, Swiggy One பல பலன்கில் ஒன்றாகும்.
வேறு பலன்கள்?
Vi Max போஸ்ட்பெய்டின் தனிநபர் மற்றும் குடும்பத் திட்டங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு விருப்பமான பலன்களைத் தேர்வுசெய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த நன்மைகள் பல வகைகளில் உள்ளன. அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட் ஆகிய ஓடிடிகளின் சந்தா கிடைக்கும்.
மேலும் பயணம் செய்பவர்களுக்கு, Easemytrip மூலம் மலிவான விமானங்களை பதிவு செய்யும் பலனும் இதில் கிடைக்கும். நார்டன் 360 மொபைல் பாதுகாப்புடன் உங்கள் மொபைலைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். மேலும், EazyDiner மற்றும் இப்போது Swiggy One Membership மூலம் உணவுகளில் தள்ளுபடியைப் பெறலாம்.