சென்னை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துள்ளார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் சிலை திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அந்த சிலையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். அமைச்சர் உதயநிதி இது குறித்து எக்ஸ் தளத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் […]
