
சிம்புவுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே – கீர்த்தி சுரேஷ்
தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‛கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தில் நாயகியாக நடித்தவர் பாலிவுட் தீபிகா படுகோனே. அதன்பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை. ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் இவர் இப்போது தெலுங்கில் பிரபாஸ், கமல், அமிதாப் நடிக்கும் ‛கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 48வது படத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மூன்றாம் தேதி வெளியாகும் நிலையில், இப்படத்தில் நடிக்கும், நடிகர் நடிகைகள் குறித்த தகவல்களும் வெளியாக உள்ளன. ஹீரோ- வில்லன் என சிம்பு இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஹீரோ சிம்புக்கு ஜோடியாக கீர்த்தி சுரேசும், வில்லன் சிம்புவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும் நடிப்பதாக கூறப்படுகிறது.