கணவன்-மனைவி இடையே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும்போது, புதுப்புது காரணங்களைச் சொல்வதை பார்த்திருப்போம். மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்த விஜய் சிங் என்பவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டார். ஐ.டி பிரிவில் வேலை செய்யும் விஜய் சிங் நன்றாக சம்பாதித்தார். எனவே தன்னை தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று விஜய் சிங்கிடம் அவரின் மனைவி கேட்டுக்கொண்டார். ஆனால், விஜய் சிங்கின் பெற்றோர், `திருமணத் தம்பதி ஆன்மிக ஸ்தலங்களுக்குச் சென்று வரவேண்டும்’ என்று விரும்பினர். இதில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இறுதியில் கோவாவுக்கு அழைத்துச் செல்வதாக விஜய் சிங் தன்னுடைய மனைவியிடம் வாக்குறுதி கொடுத்தார்.

இதனால் மனைவியும் சமாதானம் அடைந்தார். கோவாவிற்குச் செல்லவேண்டிய நாளுக்கு முந்தைய நாள், விஜய் சிங் தன்னுடைய மனைவியிடம், “நாம் கோவாவிற்குச் செல்லவில்லை… என்னுடைய தாயாரின் விருப்பப்படி, அயோத்திக்குச் செல்லப்போகிறோம்” எனக் கூறினார். அந்த நேரத்தில் எந்தவித தகராறும் செய்யாமல், தன்னுடைய கணவருடன், அயோத்திக்குச் சென்ற மனைவி, வீட்டுக்குத் திரும்பியதுடன், விஜய் சிங்குடன் தகராறு செய்தார்.

அதோடு போபால் குடும்ப நல நீதிமன்றத்தில், தன் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு, மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், `கணவர் எனது நம்பிக்கையை உடைத்துவிட்டார். திருமணமான தொடக்கத்திலிருந்து என்னுடைய கணவர், அவர் குடும்பத்துக்கே முன்னுரிமை கொடுத்தார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, இருவரையும் கவுன்சலிங் செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி, அவர்களுக்கு கவுன்சலிங் நடைபெற்று வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY