2009ம் ஆண்டு ஜீவா – சந்தானம் கூட்டணியில் எம்.ராஜேஷின் இயக்கத்தில் உருவான படம் ‘சிவா மனசுல சக்தி’.
விகடன் டாக்கீஸின் தயாரிப்பாக இந்தப் படம் உருவாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2009ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதைய இளைஞர்கள் மத்தியின் ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் பாடல்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இத்திரைப்படம் 14 வருடங்களுக்குப் பிறகு ‘கமலா சினிமாஸில்’ ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. தற்போது திரையரங்கில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கும் ‘சிவா மனசுல சக்தி’ ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் மூவி ஆக இருந்த இத்திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.