கொல்கத்தா: ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைந்துள்ளது. இதையடுத்து யாத்திரைக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பாரத் வடகிழக்கு மாநிலங்களில் பாரத் நியாய் யாத்திரை என்ற பெயரில் வாகனத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை, கடந்த வாரம் வியாழனன்று பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அசாமில் நுழைந்த யாத்திரை 8வது நாளான நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு கூச் பீகார் மாவட்டத்தில் உள்ள பக்சிர்ஹட் […]
