Lal Salaam: “விஜய்யை எனக்கு போட்டின்னு நினைச்சா…" காக்கா – கழுகு கதை குறித்து ரஜினி விளக்கம்

லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி ‘மொய்தீன் பாய்’ எனும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.

இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா ராஜசேகர் உட்படப் பலர் நடித்துள்ளனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பேசியுள்ள ரஜினி, “

லால் சலாம்

“என்னோட நண்பர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவாதாரிணி அகால மரணமடைந்திருக்காங்க. என்னோட ஆழ்ந்த இரங்கல்கள். அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த். கலைஞர், ஜெயலலிதா இருக்கும்போதே எதிர்கட்சித் தலைவராக இருந்தவர். சிவப்புக்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. அதை கம்யூனிஸ்ட் பயன்படுத்துவாங்க. வன்முறைக்கும் பயன்படுத்துவாங்க, புரட்சிக்கும் பயன்படுத்துவாங்க. ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்துருக்காங்க. இந்தக் கதைக்கு தேசிய விருது கிடைக்கும்னு என் மகள் சொன்னாங்க. அதுக்குப் பிறகு விருதுக்காக நான் கேட்கமாட்டேன்னு சொல்லிட்டேன். அதன் பிறகு இது உண்மை கதை சொன்னாங்க. அப்புறம் அந்தக் கதையை கேட்டேன். `ரஜினிகாந்த்தே இந்தப் படத்தைத் தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார்னு நிறைய பேர் பேசிகிட்டாங்க.’ பாபா படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லன்னு நிறுத்திட்டேன். நான் ஐஸ்வர்யாகிட்ட, நானே அந்தக் கதாபாத்திரம் பண்றேன்னு சொன்னேன். நம்ம வாழ்க்கையில நண்பர்கள் ரொம்ப முக்கியம். நண்பனுக்கும் எதிரிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. எதிரி உள்ள ஒன்னு வச்சுருப்பான். அவன் பெரிய எதிரி ஆகிடுவான்.

எனக்கு ஒரு நண்பர் இருக்கார். எனக்கு ஜெயிலர் ஹிட் சமயத்துல அந்த நண்பர் படம் பார்க்கக் கேட்டார். அடுத்த நாள் காலையில 10 மணிக்கு கால் பன்னேன். உண்மை சொல்லவா, பொய் சொல்லவானு கேட்டாரு… 30 சதவிகிதம் சந்தோஷம். 70 சதவிகிதம் சந்தோஷம் இல்லனு சொன்னார். எனக்கு வயிறு எரியுது. மூன்று முடிச்சுல இருந்து இப்போ ஜெயிலர் வரைக்கும் எந்த படம் ஹிட்டானாலும் உனக்கு நேரம் நல்லா இருக்குனுதான் சொல்வார். அதுக்கு பிறகு உனக்கு மேடையில பேசுறதுக்கு யார் இதெல்லாம் எழுதி தர்றாங்கனு கேட்டாரு.

ரஜினி

மத நல்லிணக்கம் பத்தி இந்தப் படம் முக்கியமாக பேசியிருக்கு. மனுஷங்க சந்தோசமாக இருக்கனுன்னுதான் மதம் உருவாச்சு. இப்போ நான்தான் பெருசு, நீதான் பெருசுனு பேசிக்கறாங்க. எந்த மதத்துல உண்மை, நியாயம் இருக்கோ. அதுதான் சரியாக இருக்கும். ஷூட்டிங்காக திருவண்ணாமலை போனப்போ ஏ.வ. வேலுவோட கெஸ்ட் ஹவுஸ்ல தாங்குனேன். பூலோகத்தோட கைலாஸம் திருவண்ணாமலை. இந்தப் படத்துல செந்திலுக்கு நல்ல கதாபாத்திரம் பண்ணியிருக்கார். செந்திலுக்கு எப்போவும் கவுண்டமணி அடிக்கடி கால் பண்ணுவார். அப்போ ஒரு முறை ஷூட்டிங்ல கால் பண்ணும் போது யார் ஷூட்டிங்ன்னு கேட்டிருக்கார். ரஜினினு செந்தில் சொன்னதும் ‘ அவனே முழுசா காமெடி பண்ணிடுவான், நீ எதுக்கு’னு கேட்டிருக்கார். காக்க கழுகு கதை வேற மாதிரி போயிடுச்சு. இவர் விஜய்யை சொல்றாருனு போட்டாங்க. அது ரொம்ப வருத்தமாக இருக்கு. விஜய் உழைப்பால இன்னைக்கு வேற உயரத்திற்கு வளர்ந்திருக்கார். இப்போ சமூக சேவைகள் நிறைய பண்ணிட்டிருக்காரு. விஜயை எனக்கு போட்டின்னு நினைச்சா, எனக்கு மரியாதை, கெளரவம் இல்லை. அதே மாதிரிதான் அவருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.