டில்லி இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பாஜக முயலுவதாக.காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளது. இக்கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ,மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். […]
