2009ம் ஆண்டு ஜீவா – சந்தானம் கூட்டணியில் எம்.ராஜேஷின் இயக்கத்தில் உருவான படம் ‘சிவா மனசுல சக்தி’ (SMS).
விகடன் டாக்கீஸின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அப்போதே இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதைய இளைஞர்கள் மத்தியின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் பாடல்களும் இன்றளவும் பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இத்திரைப்படம் 15 வருடங்களுக்குப் பிறகு சென்னை வடபழனி ‘கமலா சினிமாஸில்’ ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டத்தில் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஜீவா, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. SMS ஒரு வைப் என்று சொல்வார்கள். உங்களுடைய வரவேற்பை இன்ஸ்டாகிராமில் பார்த்துதான் இங்கு வந்தேன்.
15 வருடங்களுக்கு முன்னாடி இப்படி ஒரு வைப் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் முதலில் ரிலீஸ் ஆகும் போது முதல் காட்சியில் கூட்டம் இல்லை. ஆனால் அதன் பிறகு படம் பிக்கப் ஆனது. இந்தப் படம் ஒரு வைப்! இப்ப பாத்தாலும் ரொம்ப புதுசா இருக்கும். இதற்கான எல்லா கிரெடிட்ஸும் இயக்குநர் ராஜேஷுக்குதான்.”

படத்தின் ‘பார்ட் 2’ குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், “இதோ இயக்குநர்கிட்டதான் கேட்கணும். இங்கயே கேமராமேன் சக்தி சரவணன் இருக்காரு. யுவன் துபாயிலிருந்து டியூன் அனுப்பிடுவாரு. பண்ணிடலாம்!” என ரகளையாகப் பேசினார்.