பவதாரிணியை நினைத்து உருக்கமாக பதிவிட்ட வனிதா

பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை வனிதா விஜயகுமார் தனக்கும் பவதாரிணிக்குமான உறவு குறித்து நெகிழ்ச்சியாக கூறி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். வனிதா தனது இண்ஸ்டாகிராம் பதிவில், 'பவதாமா நீ எனக்கு வெறும் தோழி இல்லை, வெறும் சகோதரி இல்லை. என்னுடைய முதல் பாடலை நீ தான் பாடினாய். நமக்குள் உறவு எப்போதுமே நீடித்திருக்கிறது. உன்னை மீண்டும் சந்திக்கும் வரையில் நமக்குள் சிறுவயதில் இருந்த உறவு என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்' என தனது மன வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.