பாண்டியா இல்லை, இவரு தான் உலகின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர் – கவாஸ்கர்

இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் 87 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜாவின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். கமெண்டரியில் இருந்த அவர், “ஜடேஜா பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் களத்தில் எவ்வாறு பங்களிக்கிறார் என்பதை பார்க்கும்போது, அவர் ஒருவேளை உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கலாம். சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல், கில் ஆட்டம் குறித்தும் சுனில் கவாஸ்கர் பேசினார். கில்லின் ஷாட் சலெக்ஷன் சிறப்பாக இருக்கவில்லை, என்ன நினைப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என என்னால் அனுமானிக்க முடியவில்லை எனவும் கவலையுடன் கூறினார். ” தனக்கான இடத்தில் கில் களமிறங்கி செட்டிலாகிக் கொண்டிருந்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் எதற்கு அப்படியான ஷாட் என தெரியவில்லை. அடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு நல்ல கேப்பை பார்த்து அடித்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடு மோசமான ஷாட்டில் அவுட் ஆவதை நான் எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் முறையே 87 ரன்கள் மற்றும் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஒல்லி போப் மட்டும் நங்கூரம் போல் நிலைத்து நின்று கொண்டார். அவருடைய விக்கெட்டை இந்திய பந்தவீச்சாளர்களால் வீழ்த்த முடியவே இல்லை. 
 
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடி சதமடித்த ஒல்லி போப் 148 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். அவருக்கு பக்கபலமாக ரெஹன் அகமத் 16 ரன்களுடன் மறுமுனையில் இருக்கிறார். பெட் டக்கெட் 47 ரன்களும், பென் போக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர்படேல், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போதைய நிலையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.