தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை வெட்டியதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சி முதல் வேர் வரை இம்மரத்தின் அனைத்து பாகங்களும் பலன் அளிப்பதால் `கற்பகத்தரு’ என்று பனைமரம் போற்றப்படுவதுடன் தமிழகத்தின் மாநில மரமாகவும் பனைமரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5.10 கோடியாக இருந்த பனைமரங்கள் வீடுகட்டுவதற்கும், விறகுக்காகவும், செங்கல்சூளைக்காவும், தவிர தொழில் நிறுவனங்கள் அமைக்க தரிசு நிலங்களை மேம்படுத்தும் போதும் வெட்டப்படுவதால் தற்போது பனைமரங்களின் எண்ணிக்கை பாதியாகக் […]
