"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" – Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை ‘K10K’ மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது

கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர்.

10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Marathon

இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், “நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக்கியத்துவம் குறித்து இன்னும் விழிப்புணர்வு இல்லை. நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், உயிர்வாழும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு ஆரம்பகால கண்டறிதல் என்பது மிகவும் முக்கியமானது. மேலும், இந்த புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் மூலம் புற்றுநோய்க்கான அறிகுறிகள் குறித்து தெரியப்படுத்துவதையும், செயலூக்கம் மிக்க சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், “புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான எங்கள் குறிக்கோளுடள் செயல்பட்டு வருகிறோம். இந்த மாரத்தான் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக உடற்தகுதியை மேம்படுத்துவதை வலியுறுத்தவும் ஒரு தளமாகச் செயல்பட்டுள்ளது.

Marathon

அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களின் உற்சாகமான பங்கேற்பை நாங்கள் பாராட்டுகிறோம். மதிப்புமிக்க ஆதரவிற்காக சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிரேட்டர் சென்னை மாநகராட்சிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.