Film Baer Award for the first time in Gujarats Gift City: Chief Ministers participation | குஜராத் கிப்ட் சிட்டியில் முதல்முறைாக பிலிம் பேர் விருது: முதல்வர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காந்திநகர்: குஜராத் கிப்ட் சிட்டியில் முதல்முறைாக பிலிம் பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்றார் .

குஜராத் மாநிலத்தில் உருவாக்கப்பட்டு உள்ள கிப்ட் சிட்டி நகரத்தில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன. இந்நகரத்தில் முதன்முறையாக பிலிம் பேர் விருது வழங்கும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ள நடிகர்களை மாநில முதல்வர் பூபேந்திர படேல் கிப்ட் சிட்டியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முதல்வருடன் கிப்ட் சிட்டியின் தலைவர் ஹஸ்முக் அதியா, மற்றும் முதல்வரின் தலைமை ஆலோசகரும் சுற்றுலாத்துறையின் முதன்மை செயலாளருமான ஹரித்சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மது விலக்கு கொள்கைகளை கடைபிடித்து வரும் குஜராத் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிப்ட் சிட்டி தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிவர்களுக்கு மது அருந்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.