Putin registered his name as a candidate for the Russian presidency | ரஷ்ய அதிபர் வேட்பாளராக பெயரை பதிவு செய்தார் புடின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டி அதிபர் வேட்பாளராக தனது பெயரை விளாடிமிர்புடின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

ரஷ்யாவில் 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்றார். தற்போது அதிபராக உள்ள புடினின் பதவி காலம் வரும் (2024) மே மாதம் நிறைவடைகிறது.

இந்நிலையில் ரஷ்ய பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி நடத்துவது என முடிவு செய்து சபை தலைவர் வேலண்டினா மேட்டிவியங்கோ தீர்மானம் கொண்டு வந்தார். பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து 4 முறை அதிபராக இருக்கும் புடின் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து தனது கட்சி சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக தன் பெயரை மத்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளார்.
இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானால் 2036ம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார். இதற்கான வழி வகை செய்ய ஏற்கனவே சட்டதிருத்தத்தை முன்கூட்டியே கொண்டு வந்து அமல்படுத்தியது புடின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.