வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: கடந்த 2023ம் ஆண்டில் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023-ம் ஆண்டில் புலம் பெயர்ந்தோர் அல்லாத 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா விண்ணப்பங்களை பரிசீலித்து வருவதாக அமெரிக்க தூதரகம் 2023-ம் ஆண்டு செப்டம்பரில் செய்தி வெளியிட்டது.
இதில் எச்1பி விசாவுக்கு விண்ணப்பம் செய்துள்ளோர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். அதே நேரத்தில் வேலை உறுதி செய்யும் ஆவணத்தை பெற்றால், எந்த நிறுவனத்திலும் பணியாற்றலாம்.
இந்நிலையில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில்,இந்தியா, அமெரிக்கா இடையேயான பரஸ்பரம் நட்புறவு தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது. இதையடுத்து கடந்தாண்டில் (2023) இந்தியர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ‘எச்1பி விசா’ உள்ளிட்ட14 லட்சம் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இது 2022ம் ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement