சென்னை: தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பிப்ரவரி 1ந்தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த் தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குவார்ட்டருக்கு 10 ரூபாய் முதல் ரூ.80 வரை விலை உயருகிறது. தமிழ்நாடு அரசின் முக்கிய நிதியே டாஸ்மாக் வருமானம் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தமிழக மக்களை குடிகாரர்களாக்கி அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டே அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2023 ஜூன் […]
