லோக் சபா தேர்தலுக்கான சீட் பகிர்வு விஷயங்களை, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா தொடங்கியிருந்தாலும், இன்னும் தெளிவான முடிவுகள் எதுவும் அதில் கிட்டவில்லை. அதிலும், மேற்கு வங்கத்தில் தனியாகவே போட்டியிடப்போகிறேன் என மம்தா எடுத்த அதிரடி முடிவுக்குப் பிறகு, பஞ்சாப்பில் நாங்களும் தனித்து போட்டியிடப்போகிறோம் என ஆம் ஆத்மி கழன்றுவிட, நிதிஷ் குமார் மொத்தமாக கூட்டணியிலிருந்தே விலகிவிட்டார்.

லோக் சபா தேர்தலில் குறைந்தது 300 தொகுதிகளுக்கு மேலாவது பொது வேட்பாளர்களை நிறுத்தினால்தான் பா.ஜ.க-வை வீழ்த்தலாம் என்று பேச்செல்லாம் சென்றுருக்கொண்டிருக்கும் வேளையில், மேற்கு வங்கம், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் கூட்டணிகள் கைவிட்டுப் போய்விட்டன. மம்தாவுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என காங்கிரஸ் மேலிடம் சமாளித்து வந்தாலும், காங்கிரஸுக்கு ஒரு சீட் கூட கொடுக்கப்போவதில்லை என உறுதியாக இருக்கிறார் மம்தா.
அதற்குக் காரணம், யாரை எதிர்த்து இன்று மேற்கு வங்கத்தில் வலுவான சக்தியாக மம்தா இருக்கிறாரோ, அந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்திருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுடன் யார் இருந்தாலும், அவர்களுக்கு ஒரு சீட் கூட கிடையாது என கூறுகிறார் மம்தா. அதேசமயம், இந்தியா கூட்டணியில் தான் நீடிப்பதாகவும் கூறுகிறார். இந்த நிலையில், லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களைக் கூட வெல்வது சந்தேகம்தான் என மம்தா தெரிவித்திருக்கிறார்.

மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்கக் கோரி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பேசிய மம்தா, “காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று கூறினேன். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இப்போது, முஸ்லிம் வாக்காளர்களைத் தூண்டுவதற்காக அவர்கள் (காங்கிரஸ் – பாரத் ஜோடோ நியாய யாத்ரா) மாநிலத்துக்கு வந்திருக்கின்றனர். இனி அவர்கள் 300 தொகுதியில் போட்டியிட்டாலும் 40 இடங்களை வெல்வார்களா என்பதுகூட சந்தேகம்தான். கூட்டணிக்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். இருந்தாலும் அவர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். இப்போது அவர்கள் 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடட்டும். ஆனால், அதன்பிறகு எங்களுக்குள் எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது. இங்கு நாங்கள் தனியாகவே பாஜக-வைத் தோற்கடிப்போம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY