‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் போடாதவரைப் பார்த்து கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்திற்கு வந்த கேரள இளைஞர்களைப் பார்த்து டோஸ் விட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டார். கூட்டத்தில் மீனாட்சி லேகி பேசிய பின் தனது உரையை முடிக்கும் போது ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறி உரையை முடித்தார். […]