எல்லாமே புனிதம்… சபாநாயகன் 'ராஸ்'

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புனிதம் என்ற ஒற்றை வார்த்தையை கூறி இளைஞர்களின் மனதை கட்டி போட்ட அழகு பெண்மை. 'சபாநாயகன்' படத்தின் மூலம் விழி வழியாக ஊடுருவி மனதில் அமர்ந்த ராஸ் நம்முடன் பகிர்ந்தது.
பிறந்து, வளர்ந்தது
பிறந்து, வளர்ந்தது புதுக்கோட்டை. திருமயத்தில் பள்ளி படிப்பை முடித்த பின் கல்லுாரி படிப்பு. தொடர்ந்து எம்.காம்., பயின்றுள்ளேன்.
வீட்டை விட்டு வெளியேறிய காரணம்
எம்.காம்., படிக்கும் போது என் சம்மதம் இல்லாமல் திருமண ஏற்பாடு செய்தனர். திருமணத்தில் உடன்பாடு இல்லை என பெற்றோரிடம் தெரிவித்தும் கட்டாயப்படுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறினேன்.
சென்னைக்கு வந்து சந்தித்த சவால்கள்
வீட்டை விட்டு வெளியேறியதும் சென்னையில் தங்கும் விடுதியில் இருந்தபடி வேலை தேடினேன். 3 மாதங்களாக வேலை கிடைக்கவில்லை. நண்பர் மூலம் புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் ஆலோசனையாளராக பணிபுரிந்தேன். அதன் பின் சென்னையில் சில நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன்.
புனிதம் என்ற வார்த்தையால் பிரபலமானது எப்படி
தனியார் தொலைக்காட்சியில் தோழி இன்டென்ஷிப் செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க போதிய நபர்கள் இல்லாததால் கலந்து கொள்ள கூறினார். ஒரு மணி நேர ஷூட்டிங் ஜாலியாக இருக்கும் என பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்ட 'புனிதம் ' என்ற வார்த்தை இடம்பெற்ற காட்சி ஒரு மாதத்திற்குள் இன்ஸ்டாகிராம் தளத்தில் பிரபலமானது.
2023 ஆண்டு மறக்க முடியாத நினைவுகள்
2023 ஆண்டு கடன் பிரச்னைகள் இருந்தன. அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன்.
2024ல் எடுத்துக்கொண்ட சபதம்
இந்த ஆண்டு நான் நடித்த 'சபாநாயகன் ' திரைப்படம் வெளியாகி உள்ளது. அடுத்ததாக சப்தம், சித்தார்த் என இரு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 'சப்தம் ' திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகளுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடன் இல்லாத வாழ்க்கை வாழ முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.
உடற்பயிற்சிக்காக மேற்கொள்பவை
தனியாக எதையும் மேற்கொள்வதில்லை. கிடைக்கும் ஓய்வு நேரங்களில் நன்றாக துாங்கி விடுவேன். ஓட்டல் உணவுகளை உட்கொள்வதை விட நண்பர்களுடன் வீட்டில் உணவு தயார் செய்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.
மேக்கப்போடாமல் இருப்பது பற்றி
மேக்கப்போடுவது எனக்கு பிடிக்காது. நடித்த படங்களில் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதால் மேக்கப் போடாமல் நடித்துள்ளேன். மேக்கப் போட்டால் அழகாக தெரியமாட்டேன் என்பதால் தவிர்க்கிறேன்.
காதல் திருமணமா…
திருமணம் பற்றி இதுவரை யோசித்தது இல்லை. என்னை நன்றாக பார்த்துக்கொள்பவரை பெற்றோருக்கு தெரியப்படுத்தி திருமணம் செய்வேன்.
முன்னேற துடிக்கும் பெண்களுக்கான அட்வைஸ்
வெற்றிக்கான வாய்ப்பை யாராவது ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். யாருமே இல்லாதபோது தான் நம்முடைய திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.