இஷான் கிஷன் இஷ்டப்பட்டால் இந்திய அணிக்கு திரும்பலாம்: ராகுல் டிராவிட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இஷான் கிஷன் ரிட்டன்ஸ் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இஷான் கிஷன் இப்போது ஓய்வில் இருக்கிறார். அவர் விரும்பும்போது கிரிக்கெட் விளையாட தொடங்க வேண்டும். அதன்பிறகு இந்திய அணியில் சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். கொஞ்சம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்வதாக கேட்டிருந்தார், அவரின் கோரிக்கையை ஏற்று நாங்கள் மகிழ்ச்சியாக விடுப்பு கொடுத்திருக்கிறோம் என கூறிய ராகுல் டிராவிட், கிரிக்கெட் விளையாட தொடங்கியபிறகு இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

” இஷான் கிஷன் குறித்து ஏற்கனவே பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். அவையெல்லாம் போதுமானது என நினைக்கிறேன். இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். அவர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் ஓய்வு வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று மகிழ்ச்சியாக அனுப்பி வைத்திருக்கிறோம். இஷான் கிஷன் இந்திய அணிக்கு திரும்புவது அவர் கையில் தான் இருக்கிறது. நாங்கள் ஏதும் அவரை வற்புறுத்தவில்லை. இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் இஷான் கிஷன் கொஞ்சம் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதன்பிறகு அவர் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார். 

எப்போது அணிக்கு வரவேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என ராகுல் டிராவிட் தெரிவித்தார். இஷான் கிஷனைப் பொறுத்தவரையில் கடந்த நவம்பர் முதல் இந்திய அணிக்காக விளையாடவில்லை. ஒருசில போட்டிகள் நன்றாக விளையாடிய போதும் தொடர்ச்சியாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து பாதியிலேயே இந்திய அணி நிர்வாகத்திடம் விடுப்பு கேட்டுவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். அதன்பிறகு ரஞ்சி டிராபியில் விளையாடுமாறு இந்திய அணி தரப்பில் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ரஞ்சி டிராபி விளையாடவில்லை. 

இதனால் அவருக்கும் இந்திய அணி நிர்வாகத்துக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டதில் இருந்து இஷான் கிஷனின் பிளேயிங் லெவன் வாய்ப்பு என்பது இல்லாத நிலைக்கு சென்றுவிட்டது. இருப்பினும், அவர் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் நேரடியாக ஐபிஎல் விளையாடி அதன்பிறகு இந்திய அணிக்கு வரலாம் என முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.