நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரனை முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவினர் தேர்ந்தெடுத்தனர். கடந்த 2 ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் 10 நாட்களுக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை […]
