
புதிய சீரியலில் கேப்ரியல்லா
சின்னத்திரை இளம் நடிகை கேப்ரியல்லா, பிக்பாஸ் மூலம் பிரபலமானார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீசன் 2வில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் பிறகு சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்து வந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நந்தினி, கண்ணே கலைமானே போன்ற சீரியலில் கதாநாயகனாக நடித்த ராகுல் ரவி நடிக்கிறார். நேற்று இந்த புதிய சீரியலின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர். விரைவில் இந்த சீரியல் தலைப்புடன் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.