இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில், வரும் 8ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு, புதிய அரசியல் கட்சி வாயிலாக தேர்தலில் போட்டியிடுகிறது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிப்.08-ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. அத்துடன், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது.
இந்த தேர்தலுக்காக பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008 நவ., 26ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட, தடை செய்யப்பட்ட, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், புது கட்சி வாயிலாக, பாக்., பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தது உட்பட பல்வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, லாகூரில் உள்ள சிறையில், ஹபீஸ் சயீத் அடைக்கப்பட்டுள்ளார்.
‘பாக்., மார்கசி முஸ்லிம் லீக்’ என்ற கட்சி வாயிலாக, பாக்., பொதுத் தேர்தலில், பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் ஆதரவாளர்களும், தடை செய்யப்பட்ட லஷ்கர் – -இ- – தொய்பா, ஜமாத்- – உத் – -தவா, மில்லி முஸ்லிம் லீக் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுவது தெரிய வந்துள்ளது.
ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத், பாக்., மார்கசி முஸ்லிம் லீக் சார்பில், பொதுத் தேர்தலில், லாகூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதே போல், ஹபீசின் மருமகன் ஹபீஸ் நெக், குஜ்ஜார் மாகாண சட்டசபை தேர்தலில் களமிறங்குகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்