ஐபிஎல் போட்டிகளில் சதம் அடிக்காத நட்சத்திர வீரர்கள் யார் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் உலகம் முழுவதும் நடைபெறும் மற்ற லீக் போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.  மற்ற நாட்டின் தலைசிறந்த வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டு பல புதிய சாதனைகள் ஐபிஎல் போட்டிகளில் நடைபெறுகிறது.  பல இளம் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சிறந்த வீரர்களாக இருந்தும், இதுவரை ஐபிஎல்லில் ஒரு சதம் கூட அடிக்காத ஐந்து வீரர்களை பற்றி பார்ப்போம்.

ஐபிஎல் சதம் அடிக்காத 5 ஜாம்பவான்கள்

எம்எஸ் தோனி

இந்திய அணிலும், ஐபிஎல் லீக்கிலும் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்றால் அது எம்எஸ் தோனி தான். ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ள பெருமையும் தோனியையே சேரும்.  அவரை பார்க்கவே ஐபிஎல் போட்டிகளை நிறைய பேர் பார்க்கின்றனர்.  ஆனாலும், இதுவரை லீக்கில் சதம் அடிக்காத வீரர்கள் பட்டியலில் தோனியும் ஒருவர். தோனி அணியில் ஒரு ஃபினிஷராக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளது.  மேலும், கீழ் வரிசையில் விளையாடுவதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவருக்கு அதிக பந்துகள் விளையாட கிடைப்பதில்லை.  தோனி இதுவரை 250 ஐபிஎல் போட்டிகளில் 24 அரை சதங்களுடன் 5082 ரன்கள் எடுத்துள்ளார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்.

கௌதம் கம்பீர்

கெளதம் கம்பீர் இரண்டு முறை ஐபிஎல் பட்டத்தை வென்று கேப்டன்களில் ஒருவர் ஆவார்.  மேலும், ஐபிஎல் லீக் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய சிறந்த தொடக்க வீரர்களில் ஐவரும் ஒருவர்.  கம்பீர் இதுவரை ஐபிஎல் லீக்கில் 154 போட்டிகளில் விளையாடி உள்ளார். 31.00 சராசரியில் 4217 ரன்கள் எடுத்தார், ஆனால் ஐபிஎல்லில் ஓப்பனராக விளையாடியும் ஒரு சதம் கூட அவர் முடியவில்லை.

கிளென் மேக்ஸ்வெல்

க்ளென் மேக்ஸ்வெல் டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த சாதனையை படைத்துள்ளார், ஆனால் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.  க்ளென் மேக்ஸ்வெல் இதுவரை ஐபிஎல்லில் 124 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக இதுவரை விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வரும் மேக்ஸ்வேல் ஐபிஎல்லில் சதம் அடிக்கவில்லை.

ஃபாஃப் டு பிளெசிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த துவக்க வீரராக விளையாடிய ஃபாஃப் டு பிளெசிஸ் கடந்த மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் எடுக்கப்பட்டார்.  பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் சிறந்த துவக்க வீரராக இருந்து வருகிறார் ஃபாஃப் டு பிளெசிஸ்.  கேப்டன் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர்களில் ஒருவராக இருந்தாலும், அவரால் இன்னும் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.  ஃபாஃப் டு பிளெசிஸ் சென்னை மற்றும் மற்றும் ஆர்சிபி அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 36.90 சராசரியில் 4133 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் இதுவரை 33 அரை சதங்கள் அடித்துள்ளார்.

கீரன் பொல்லார்ட்

கெய்ரோன் பொல்லார்டு ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராவார். மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற ஐந்து ஐபிஎல் கோப்பைகளிலும் இவரது பங்கு மிக முக்கியமானது.  டி20 கிரிக்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த வீரர்களில் இவரும் ஒருவர்.  பொல்லார்ட் 2010 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.  89 போட்டிகளில் 16 அரை சதங்களுடன் 147.32 ஸ்ட்ரைக் ரேட்டில் 3412 ரன்கள் எடுத்துள்ளார்.  ஆனாலும் அவரால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.