டெல்லி: பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அரசு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் விதிகள் முன்மொழியப்பட்ட சட்டத்தில் அடங்கும். தேர்வுத் […]
