ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21ஆம் திகதியை “தேசிய கடற்படை வீரர்கள் தினம்” என பிரகடனப்படுத்துவதற்காக துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த தீர்மானத்தை அமைச்சரவை அனுமதித்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு கடற்படையினரால் வழங்கப்படும் பங்களிப்பை வரவேற்பதற்காக தேசிய கடற்படை வீரர்கள் தினமொன்றை பிரகடனப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
அதனூடாக கடற் தொழிலில் ஆர்வத்தை அதிகரிப்பதற்காகவும், அதன்பால் ஈர்ப்பதனால் வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக மற்றும் சமுத்திரப் பிரிவின் சேவையை அதிகரிப்பதனால் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.