Revanth Reddy meets Sonia Gandhi, urges her to contest Lok Sabha elections 2024 from Telanganas Khammam | “தெலுங்கானாவில் போட்டியிடுங்கம்மா” – சோனியாவிடம் ரெட்டி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஐதராபாத்: காங்.,முன்னாள் தலைவர் சோனியா தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். இவரது மகன் ராகுல் கேரள மாநிலம் வயனாட்டின் எம்.பி.,யாக உள்ளார். வரும் பார்லி., தேர்தலில் தெலுங்கானா மாநிலம் ஹம்மம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியாவை நேரில் சென்று வலியுறுத்தி கேட்டு கொண்டார். இது தொடர்பாக காங்., கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் அவரிடம் வழங்கினார். ” இது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என சோனியா பதில் அளித்துள்ளார்.

நிச்சயம் வெற்றி

சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் ரேவந்த் ரெட்டி , மக்களை கவரும் பெண்கள் இலவச பஸ், ஏழைகளுக்கு மருத்துவ செலவு ரூ. 10 லட்சம் என்ற அறிவிப்பு நல்ல பெயரை தந்துள்ளது. இதனால் வரும் பார்லி., தேர்தலில் மாநிலத்தில் 17 தொகுதிகளையும் காங்., வெல்லும் என்ற நம்பிக்கையில் முதல்வர் உள்ளார். தெலுங்கானா உருவாக காரணமாக இருந்த சோனியாவை மாநில மக்கள் தாயாக கருதுகின்றனர், இங்கு சோனியா போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் முதல்வர் ரெட்டி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.