வாஷிங்டன்: ‛‛ இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு சப்பாத்தி போல மெலிதானது அல்ல: பூரி போன்று பெரிதானது ” என அமெரிக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஜெப்ரி ஆர் பியாட் கூறியுள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு தொடர்பாக ஜெப்ரி பியாட் கூறும்போது, ‛‛ இன்று எந்த நாடுகளும் தங்களது வர்த்தக உறவை சப்பாத்தி போன்று மென்மையாக வகைப்படுத்த மாட்டார்கள். அது பூரி போன்று பெரிதாக இருக்கும்.
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடப்பதாக தெரியவில்லை. ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை இன்னும் ஆழமாக வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement