சென்னை: சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக அடி வாங்கி இருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட ஆடியோ ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின. அதில், டிடி ரிட்டன்ஸ் படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி வாகை சூடியது.
