
மார்ச் மாதத்தோடு விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவடைகிறது!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படிப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற உள்ளது. அதன்பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெறுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் மார்ச் மாதத்தோடு விடாமுயற்சி படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவில் கூறுகிறார்கள். உடனடியாக இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு மே மாதத்தில் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர்.