வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: பி.ஜே.பி.,க்கும் (பாரதிய ஜனதா தளம்), பி.ஜே.டி.,க்கும் (நவீன் பட்நாயக் கட்சி) உள்ள ஒரே வித்தியாசம் ‘பி’ மற்றும் ‘டி’, என்பது மட்டும் தான். மற்றவை அனைத்தும் ஒன்று தான் என காங்கிரஸ் எம்.பி ராகுல் மறைமுகமாக சாடியுள்ளார்.
பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டுள்ள காங்., எம்.பி., ராகுல், ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் பேசியதாவது:
நாட்டில் சமூக அநீதி நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்துகின்றனர். அதனை அதானி போன்ற தொழில் அதிபர்கள் அனுபவிக்கிறார்கள். சாலைகள் மற்றும் பாலங்களை கட்ட அதானி நிறுவனம் டெண்டர் எடுக்கிறது. ஊடகங்களை தங்களின் கட்டுப்பாட்டில் அதானி வைத்துள்ளார். எங்களிடம் கேள்வி கேட்கும் ஊடகங்கள் நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை.
பா.ஜ.,வை ஆங்கிலத்தில் பி.ஜே.பி (பாரதிய ஜனதா தளம்) என்பார்கள். நவீன் பட்நாயக் கட்சியை ஆங்கிலத்தில் பி.ஜே.டி(பிஜு ஜனதா தளம்) என்பார்கள். இந்நிலையில், பி.ஜே.பி.,க்கும், பி.ஜே.டி.,க்கும் உள்ள ஒரே வித்தியாசம் ‘பி’ மற்றும் ‘டி’, என்பது மட்டும் தான். மற்றவை அனைத்தும் ஒன்றுதான். ஒடிசாவில் ஆதிவாசிகளின் நிலத்தை அபகரிக்க சதி நடக்கிறது. பிரதமர் மோடி தன் வாழ்நாள் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டார். இவ்வாறு ராகுல் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement