Thangalaan: மீண்டும் தள்ளிப்போகிறதா தங்கலான்? எப்போது ரிலீஸ்?

பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் நிஜமாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது.

அத்தனை ஹீரோக்களும் விக்ரம் ஏற்றிருக்கும் கேரக்டர் பற்றியும் அதற்கான உழைப்பு பற்றியும் ஆச்சர்யப்படுகிறார்கள். அவரோடு பசுபதி, பார்வதி திருவோத்துதிருவோத்து, மாளவிகா மோகனன் எனப் பலரும் நடிக்கிறார்கள். அத்தனை பேரும் சூட்டிங் முடிந்த பிறகும் ஹோட்டல்களுக்கு போகாமல் விக்ரமின் நடிப்பை பார்க்கக் கூடியிருப்பது நடந்திருக்கிறது.

‘தங்கலான்’ விக்ரம்

தங்கம் வெட்டியெடுக்கும் கோலார் வயலை பின்னணியில் வைத்து எடுக்கும் தங்கலானின் அடுத்த கட்ட ஷுட்டிங் மதுரை, சென்னையிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் அவசரப்படாமலும் வேண்டிய நேர்த்தி கிடைக்கும் வரைக்கும் எடுத்திருப்பதால் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்திற்கு எக்கச்சக்கமாக செலவழித்திருக்கிறது. இதில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஹீரோவுக்கும் அப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதாம். படத்தின் குவாலிட்டிக்கு செலவழிப்பதில் எனக்கு பிரச்னையே இல்லை என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் ஞானவேல் ராஜா.

ஷுட்டிங் முடிந்த பிறகு அடுத்தடுத்த வேலைகள் படுவேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருட பொங்கலுக்கு படத்தை பிரமாதமாக வெளியிட்டு விடலாம் என ஆசையோடு இருந்தது யூனிட். அப்படியும் கொஞ்சம் கொஞ்சம் வேலைகள் பாக்கி இருந்ததால் அதை சரி செய்ய காலம் தேவைப்பட்டது. ஜனவரி 26க்குள் தங்கலானை கொண்டு வந்து சேர்ப்பதில் கஷ்டங்கள் இருந்ததால் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து போஸ்ட் புரொடக்சன் வேலைகளை எடுத்துச் செய்யலாம்.

பா.ரஞ்சித்

ஏப்ரல் மாதத்திற்கு தங்கலானை தள்ளி வைத்தார்கள். அதற்கு அடுத்து ஏப்ரல் மாதத்தில் கொண்டு வந்து விடலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால் இப்போது தேர்தல் வருவதால் யோசிக்கிறார்கள். எப்படியும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மே முதல் இரண்டாவது வாரத்தில் புதிய அரசு அமைக்கப்படலாம் என்பதால் ஏப்ரலில் தேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் தேர்தல் பரப்புரை, விவாதங்கள் என தேர்தல் களம் பரபரப்படைவதால் அந்தச் சமயத்தில் படம் வெளி வந்தால் கவனம் பெறாமல் போய்விடுமோ என்ற கவலை யூனிட்டுக்கு வந்திருக்கிறது. இவ்வளவு தூரம் கடுமையாக உழைத்து கவனத்திற்கு மக்கள் கவனத்திற்கு பூரணமாக போக வேண்டும் என்பதே யூனிட்டின் விருப்பமாக இருக்கிறது.

தங்கலான்

ஏப்ரல் ஆரம்பத்தில் வெளியிடலாம் தேர்தல் முடிந்த உடனேயே வெளியிடலாம் இன்னொரு தரப்புமாக யூனிட்டில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விவாதத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பது முன்கூட்டியே இப்போது தெரிந்துவிடும். கண்டிப்பாக தங்கலான் தள்ளிப் போகும் என்பதே இப்போதைய உண்மை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.